Friday, March 15, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்'அடேய்..கேமராமேன்' - கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்த ஃபன் சம்பவம்

    ‘அடேய்..கேமராமேன்’ – கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்த ஃபன் சம்பவம்

    கிரிக்கெட் வீரர் அஸ்வின் குறித்த காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் 2022-ம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது.

    இந்த ஆட்டத்தின் டாஸ் நிகழ்வின்போது நடைபெற்ற சம்பவம் ஒன்று தற்போது சமூகவலைதளத்தில் காணொளியாக வைரலாகி வருகிறது. அதன்படி, டாஸ் நிகழ்வின்போது ரோஹித் சர்மாவை ரவி சாஸ்திரி பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். அந்த பேட்டியின் போது, ரோஹித் சர்மாவிற்கு  பின்னால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஸ்வின் இரண்டு டி ஷர்டுகளைக் கொண்டு அவற்றுள் ஏதோ சரிபார்த்துக் கொண்டிருந்தார். 

    அதன்பின், இரு டி ஷர்ட்களையும் அஸ்வின் முகர்ந்து பார்த்தார். இந்த செயல்கள் அடங்கிய காணொளியை ஒருவர் சரியாகக் கவனித்து ட்விட்டரில் வெளியிட்டார். ட்விட்டரில் பதிவாக வெளியிட்டவர், நமது உடைகளைச் சரியாகக் கண்டுபிடிக்க இதுவே நல்ல வழி என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது இந்தக் காணொளியை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் ரீட்வீட் செய்ததால் அனைவருக்கும் இந்தக் காணொளி சென்று சேர்ந்தது.

    இந்த காணொளி குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளதாவது; ‘அளவுகளின் படி என்னுடையதா எனப் பார்த்தேன். இல்லை. அதில் இனிசியல் இருந்ததா எனப் பார்த்தேன். இல்லை. கடைசியாக நான் பயன்படுத்தும் வாசனைத் திரவியம் குறித்தும் சோதித்துப் பார்த்தேன். என்று பதிவிட்டவர், அடேய் கேமராமேன்…’ எனவும் நகைச்சுவையாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: “சூர்யகுமார் ஆட்டம் கொண்டாட்டமானது”: புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....