Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்அபராதத்தில் சிக்கிய ஆப்பிள் நிறுவனம்; என்ன காரணம் தெரியுமா?

    அபராதத்தில் சிக்கிய ஆப்பிள் நிறுவனம்; என்ன காரணம் தெரியுமா?

    பிரேசில் நாட்டு அரசு ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதத்தை விதித்து உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்துக்கு என்று உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஆப்பிள் வெளியிடும் ஐபோனுக்குரிய ப்ரியர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். தற்போது கூட பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த வகை ஐபோன் 14 ப்ரோவுக்கு உலகளவில் பலர் காத்திருக்கின்றனர். 

    இந்நிலையில், பிரேசில் நாட்டு அரசு ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதத்தை விதித்து உள்ளது. இந்த அபராதத்திற்கு காரணம் என்னவென்று நோக்கினால், சார்ஜர் இல்லாமல் ஐபோனை விற்றதே ஆகும். 

    பிரேசிலில் சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

    ஐபோனின் 12 மாடல் சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்தது தொடர்பாக நடந்த விசாரணையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், முழுமையற்ற தயாரிப்பின் விற்பனை, நுகர்வோருக்கு எதிரான பாகுபாடு, மூன்றாம் தரப்பினருக்கு பொறுப்பை மாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டு கூறப்பட்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கவும்: பாப்கார்ன் சாப்பிட்டால் எடை குறையுமா? – இதென்ன புதுசா இருக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....