Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்பாப்கார்ன் சாப்பிட்டால் எடை குறையுமா? - இதென்ன புதுசா இருக்கு!

    பாப்கார்ன் சாப்பிட்டால் எடை குறையுமா? – இதென்ன புதுசா இருக்கு!

    நாம் சினிமா தியேட்டரில் இடைவேளைகளில் வாங்கி சாப்பிடும் பாப்கார்னில் ஏரளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன என்றால் நம்ப முடிகிறதா ?ஆம் நார்ச்சத்து நிறைந்த மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பாப்கார்ன்களை சாப்பிடுவதால் உடல் எடை குறையுமாம்.

    உடல் எடை குறைப்பில் முக்கியமானதே எடையை சரியாக நிர்வாகிப்பது தான். இப்படி கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், நீங்கள் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு செலவிட்ட கலோரிகளை அது திரும்ப கொண்டு வந்துவிடும். அதற்காக எல்லா நொறுக்குத் தீனிகளும் தவறானது என ஒதுக்கிவிடவும் முடியாது. கலோரிகளை கூட்டாத, உடலுக்கு தீங்கில்லாத நல்ல நொறுக்குத்தீனிகளும் இருக்க தான் செய்கிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது வரும் பெரும்பாலானோருக்கு சில வகை உணவுகள் மீது தீராத ஆசை ஏற்படும். அப்படி உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருப்பவர்கள் கண்ட நொறுக்குத்தீனிகளை முயற்சிப்பதற்கு பதிலாக பாப்கார்னை சாப்பிட்டால் உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பாப்கார்னில் கலோரிகள் அளவு குறைவு என்பதால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மேலும், இதில் நார் சத்தும் இருப்பதால் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். அதிலும் பாப்கார்ன்களில் ஆற்றல் அடர்த்தி குறைவாக இருப்பதால் எடை குறைப்புக்கு மிகச்சிறந்த உணவு என்று கூறப்படுகிறது. பாப்கார்னில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் சருமத்திற்கு நல்ல போஷாக்கை கொடுப்பது போலவே உடலுக்கும் கொடுக்கிறது.

    பாப்கார்னை மெல்லும்போது, உங்கள் தாடையும் சேர்ந்து நன்றாக இயங்குவதால் தாடை தசைகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது .அதுமட்டுமின்றி நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும், இதனை உட்கொள்வதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

    இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது புற்று நோய். இந்த புற்றுநோய்க்கு காரணமான தொற்றுகளிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ள மிகப்பெறிய அளவில் உதவுகிறது.

    மேலும் பாப்கார்ன் ஒரு ஆரோக்கியமான நமக்கு உடல் எடை குறைய உதவும் ஒரு சிறந்த நொறுக்கு தீனி என்றாலும் அதையும் அளவோடுதான் சாப்பிட வேண்டும். அதனை உங்களுடைய டயட் பிளானில் சேர்ப்பதற்கு முன்பு கவனம் தேவை. மற்ற நொறுக்குத்தீனிகளைப் போலவே தான், அதிக அளவிலான பாப்கார்ன் சாப்பிடுவதும் வெயிட்டை குறைக்கும் முயற்சியை சீரழித்துவிடும். மற்றொன்று அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது முக்கியம்.

    ஏனென்றால் உடல் எடையை குறைக்க வேண்டிய ஒருவர் மால் அல்லது தியேட்டர்களில் விற்கப்படும் வெண்ணெய் உப்பு சேர்த்த பாப்கார்கன்களை எடுத்துக்கொள்வது நல்லது அல்ல. இவை இரண்டுமே உடல் எடையை அதிகரிக்கும் என்பதால், வீட்டில் சிறிதளவு சோளத்தை பாப் செய்து சாப்பிடுவது நல்லது.

    இதையும் படிங்க: ஓணம் கொண்டாட்டம்: தொடங்கிய 5 நாட்களில் 324 கோடிக்கு விற்கப்பட்ட மது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....