Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்! செயற்கைக்கோள் படங்களால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி

    அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்! செயற்கைக்கோள் படங்களால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி

    அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் எப்போதும் உருகுவதைவிட கோடையில் அதிகமாக உருகுவது செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. 

    உலகம் முழுவதும் காலநிலை மாற்ற பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் வேகமாக உருகி வருகின்றன. இந்தக் காலநிலை மாற்றத்தின் காரணமாக எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன. 

    இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்தில் இருக்கும் உள்ள பனிப்பாறைகள் முன்பிருந்த கோடைக்காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக உருகி வருவதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இது முந்தையக் கோடைக் காலங்களைக் காட்டிலும் 22 சதவீதம் வேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகமான மாற்றம் கடல்நீர் மட்ட உயர்வுக்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மட்டும் 7.6 மில்லி மீட்டர் கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    பொன்னியின் செல்வன் -2 : படக்குழு வெளியிட்ட வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....