Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆஸ்கர் மேடையில் 'நாட்டு நாட்டு' - உற்சாகத்தில் ரசிகர்கள்

    ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ – உற்சாகத்தில் ரசிகர்கள்

    சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் மேடையில் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் விருது. இந்த விருது வழங்கும் விழாவானது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வருகிற மார்ச் – 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவாகும். 

    இந்த விழாவில் இந்தியா சார்பில், ஆஸ்கர் விருதுக்கான சிறந்த பாடலுக்கான சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும், ஆவணப்படம் பிரிவின் பரிந்துரை பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சௌனாக் சென் இயக்கிய ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ படமும், குறு ஆவணப்படம் பிரிவில் கார்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படமும் இடம்பெற்றுள்ளது. 

    இந்நிலையில், சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் மேடையில் பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டு நாட்டு பாடலை பாடகர்கள் கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் ஆகிய இருவரும் இணைந்து பாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எம்.எம்.கீரவாணி இசையமைத்து, சந்திரபோஸ் எழுதிய இந்தப் பாடலை பாடகர்கள் கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் இணைந்து பாடினர். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான பாடலுக்கு பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்திருந்தார். 

    முன்னதாக,உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளைக் குவித்த இந்தப் பாடல் கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் ‘கோல்டன் குளோப்’ விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. 

    பொன்னியின் செல்வன் -2 : படக்குழு வெளியிட்ட வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....