Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா..

    சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா..

    ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் சாய்த்தும், 5,000 ரன்களையும் எட்டி சாதனை படைத்துள்ளார். 

    ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 

    இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகிறது. இந்நிலையில், முதல் விக்கெட்டான டிராவிஸ் ஹெட்டை வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா ஒரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். 

    இந்த விக்கெட் மூலம் ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் சாய்த்து, 5,000 ரன்களையும் எட்டி சாதனை படைத்தார். அத்தகைய சாதனை புரிந்த 2-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இச்சாதனைப் பட்டியலில் முதல் வீரராக கபில் தேவ் உள்ளார். 

    ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 260, ஒரு நாள் கிரிக்கெட்டில் 189, இருபது ஓவர் கிரிக்கெட்டில் 51 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருக்கிறார். அதேபோல டெஸ்ட்டில் 2,619, ஒரு நாளில் 2,447, இருபது ஓவர் கிரிக்கெட்டில் 457 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பொன்னியின் செல்வன் -2 : படக்குழு வெளியிட்ட வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....