Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் கல்லூரியில் மீண்டும் ஒரு மாணவி பலி - சென்னையில் அதிர்ச்சி

    தனியார் கல்லூரியில் மீண்டும் ஒரு மாணவி பலி – சென்னையில் அதிர்ச்சி

    சென்னை தனியார் கல்லூரியின் 4-வது மாடி படிக்கட்டில் இருந்து தவிரி விழுந்த மாணவி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னை, சௌகார்ப்பேட்டை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுனில் ஷர்மா – சீமா ஷர்மா தம்பதியினர். இவர்களின் மகள் ரோஷினி ஷர்மா, சென்னை ஜெயின் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் செப்டம்பர் 2 அன்று, அவர் 10 நாட்கள் விடுமுறைக்கு பின், கல்லூரிக்கு சென்றார். நேற்று அவர் கல்லூரிக்கு தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. 

    இதன்காரணமாக, மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட ரோஷினி ஷர்மா 4-வது மாடிக்கு வேகமாக ஏறுகையில், திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், ரோஷினி ஷர்மாவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    அவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்து ஓடி வந்த கல்லூரி பேராசிரியர்கள், அவரை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துமனையில் மாணவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வேப்பேரி காவல்துறையினர் மற்றும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

    மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க  : “KGF ராக்கி” ஆக ஆசைப்பட்டு சீரியல் கில்லராக மாறிய 19 வயது இளைஞன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....