Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபிப்ரவரி 14 ஆம் தேதி ‘பசு அணைப்பு நாள்’ திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

    பிப்ரவரி 14 ஆம் தேதி ‘பசு அணைப்பு நாள்’ திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

    காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி ‘பசு அணைப்பு நாள்’ அறிவிப்பை திரும்பப் பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. 

    உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர்கள் காதலர் தின வாரம் முழுவதும் பரிசு அளிப்பது, அன்பை பரிமாறிக் கொள்வது போன்றவற்றில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். 

    இந்நிலையில், மேற்கத்திய பண்பாடுகளில் நம் வேத கால பழக்கவழக்கங்கள் அழியும் நிலையில் இருப்பதாகவும், பசுவை அரவணைப்பதன் மூலமாக பேருவகையை அடைய முடியும் என்றும் விலங்குகள் நல வாரியம் நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பியது. 

    பசுக்கள் பல பலன்களைத் தருவதால் பசுவை கட்டிப்பிடிப்பது மனரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால், தனிநபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் பசு மீது அன்பு கொண்டவர்கள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்து இருந்தது. 

    இதற்கு பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. காதலர் தினத்தன்று வேண்டும் என்றே பசு அணைப்பு நாளை விலங்குகள் நலவாரியம் அறிவித்ததாக புகார் எழுந்தது.

    இந்நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி ‘பசு அணைப்பு நாள்’ அறிவிப்பை திரும்பப் பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. 

    இந்தியா vs ஆஸ்திரேலியா – மாஸ் காட்டும் ஜடேஜா, அக்சர் படேல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....