Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs ஆஸ்திரேலியா - மாஸ் காட்டும் ஜடேஜா, அக்சர் படேல்!

    இந்தியா vs ஆஸ்திரேலியா – மாஸ் காட்டும் ஜடேஜா, அக்சர் படேல்!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 321 ரன்களுக்கு, 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்  முதல் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், அந்த ஆணி முதல் நாள் ஆட்டத்திலேயே 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதன்பிறகு, களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 20 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நேற்றைய ஆட்ட முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. ஆட்டக்களத்தில் ரோஹித் சர்மா 55 ரன்களுடனும், அஷ்வின் ரன்களேதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

    இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நிதானமாக ஆடி வந்த இருவரில், அஷ்வின் 23 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, இதையடுத்து வந்த புஜாரா 7 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்பிறகு விராட் கோலி களத்தில் இறங்கினார். ஒருமுனையில் இரு விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். 

    உணவு இடைவேளையின்போது, இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 26 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ரோஹித் சர்மா 85 ரன்களுடனும், விராட் கோலி 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    உணவு இடைவேளைக்குப் பிறகு, வீசப்பட்ட முதல் பந்திலேயே கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ், 8 ரன்களில் லயன் பந்தில் போல்ட் ஆகி ஏமாற்றமளித்தார். இதன்பிறகு களத்தில் ஜடேஜா களமிறங்கினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தபோதும், மறுமுனையில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வந்தார். அவர் 171 பந்துகளில் சதமடித்த அவர் 120 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் பரத் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 

    இதைத்தொடர்ந்து, களமிறங்கிய அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். இருவருமே அரை சதத்தை கடந்தனர். மொத்தத்தில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 321 ரன்களுக்கு, 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

    மேலும், ஆட்டக்களத்தில் ரவீந்திர ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    ‘இங்கெல்லாம் இறைச்சி வெட்டினால் அது குற்றம்’ – உயர்நீதிமன்றம் அதிரடி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....