Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்இந்தியா"புஷ்பா'னா ஃப்ளவர்னு நெனச்சியா ஃபயர் டா" என சம்பவம் செய்த பட்டதாரி பெண்!

  “புஷ்பா’னா ஃப்ளவர்னு நெனச்சியா ஃபயர் டா” என சம்பவம் செய்த பட்டதாரி பெண்!

  ஆந்திர மாநிலம் அனகபள்ளியைச் சேர்ந்த பட்டதாரியான புஷ்பா என்கிற பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிஹெச்டி வரை படித்த ராமகிருஷ்ணா  என்பவருக்கும்  திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 

  இதனால் இராமகிருஷ்ணன், ஐதராபாத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட புஷ்பா, நான் உங்களுக்கு பரிசு வைத்திருக்கிறேன். நாம் தனியாக சந்திக்கலாம் என்று இராமகிருஷ்ணாவை அழைத்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி இராமகிருஷ்ணாவும் புஷ்பாவைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

  தனியாக இருக்கலாம் என்று கூறி மலைப்பகுதி ஒன்றுக்கு கூட்டி சென்றுள்ளார் புஷ்பா. புஷ்பா செய்யப் போவதை அறியாத இராமகிருஷ்ணாவிற்கு காத்திருந்தது, பெரும் அதிர்ச்சி. இருவரும் சில மணி நேரங்கள் செலவிட்டுள்ளனர். அதன் பிறகு, புஷ்பாவும் ராமகிருஷ்ணாவும் பைக்கில் நண்பர்களை பார்க்கச் சென்றுள்ளனர். உடனே புஷ்பா, உனக்கு ஒரு பரிசு வாங்க வேண்டும் என்றுக் கூறி கடைக்கு சென்று திரும்பியுள்ளார். இருவரும் மீண்டும் பைக்கில் செல்ல ஆரம்பித்தனர். பின்பு பாபா கோவில் என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, பரிசு தரப்போவதாக புஷ்பா கூற அப்போது வண்டியை நிறுத்தியுள்ளார், இராமகிருஷ்ணா. இதன்பிறகு இராமகிருஷ்ணாவின் கண்களை தனது துப்பட்டாவால் கட்டியுள்ளார். 

  வெகுநேரம் ஆகியும் பரிசு தராததால் இராமகிருஷ்ணா, பரிசு இருக்கிறதா இல்லையா? தர போகிறாயா இல்லையா? என்று கேட்டு கண்கட்டை அவிழ்க்கும் நேரத்தில், சட்டென்று தான் வாங்கி வந்த பரிசான கத்தியை வைத்து, இராமகிஷ்ணாவின் கழுத்தில் வெட்டியுள்ளார். பிறகு அவர் அலறியதை பார்த்த புஷ்பா, என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி இராமகிருஷ்ணாவின் கால்களை பிடித்து கதறி அழுதுள்ளார். பின் இராமகிருஷ்ணா முதலில் நாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி, அவரே வண்டியையும் ஓட்டிக்கொண்டு புஷ்பாவையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். 

  சிறிது தூரம் சென்றதும் இராமகிருஷ்ணா, அதிக இரத்தப்போக்கின் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து புஷ்பா அருகில் இருப்பவர்களை அழைத்து உதவிகேட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். 

  பின் காவல் துறையினர் விசாரித்ததில், புஷ்பா உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் பெற்றோருக்காகத் தான் ஒப்புக்கொண்டதாகவும் தனக்கு ஆன்மிகத்தில் தான் அதிகம் நாட்டம் உள்ளதகாவும், தான் இந்த தவறை அடுத்து என்ன நடக்கும் என்று எதையும்  யோசிக்காமல் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

  இதையடுத்து, புஷ்பாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்து இன்றி சிகிச்சை பெற்று வருகிறார். 

  இந்த செய்தி திரைப்படங்களில் வருவது போன்று தோன்றினாலும், ராமகிருஷ்ணா பிஹெச்டி வரை படித்த பையன் என்பதால் நல்லா புத்திசாலியாத்தான் இருந்திருக்கிறார். பெண் அடுத்து நடக்கப்போவதை யோசிக்காமல் இப்படிச் செய்து சிறைவாசம் சென்றுள்ளார். இனி, ஒரு பொண்ணு தனியா கூப்பிட்டா, மச்சான் நீ போவியா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

  எது எப்படியோ, டார்க் காமெடி போல் தோன்றினாலும் இது உண்மைச் சம்பவம்!

  இதையும் படியுங்கள், மணமேடையை விட்டு ஓட்டம் பிடித்த மணப்பெண்! வைரலாகும் வீடியோ பதிவு!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....