Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசென்னை அணியும், மும்பை அணியும் இன்று மோதல்! யார் கை ஓங்கும்?

    சென்னை அணியும், மும்பை அணியும் இன்று மோதல்! யார் கை ஓங்கும்?

    தமிழக திரைத்துறையில் விஜய் – அஜித்குமார் எப்படியோ, அதேப்போலவே இந்தியன் பிரிமீயர் லீக்கை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள். இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டிதான் இன்று நடைபெற இருக்கிறது. இரு அணிகளுக்கும் ரசிக பட்டாளங்கள் அதிகம். 

    ஆனால், துரதிர்ஷ்டவசமாக சென்னை மும்பை ஆகிய இரு அணிகளும் நடைபெற்று வரும், இந்த 15 ஆவது ஐபிஎல் தொடரில் படுதோல்விகளை சந்தித்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளன. சென்னை அணியானது ஆறு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. மும்பை அணியானது விளையாடிய ஆறு போட்டிகளிலுமே தோல்வியைச் சந்தித்துள்ளது.

    இரு அணிகளை பொறுத்தவரையிலுமே, பெரிய பலவீனமாக பார்க்கப்படுவது பந்துவீச்சுதான். குறிப்பாக, மும்பை அணியின் பந்துவீச்சு சரிவர இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எதிர்ப்பார்க்கபடும் பும்ரா கடந்த ஆறு போட்டிகளில் வெறுமனே நான்கு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இது மும்பை அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    சென்னை அணி வெற்றிப்பெற வேண்டிய சமயங்களில் எல்லாம் பந்துவீச்சில் சொதப்பி தோல்வியைத் தழுவி விடுகிறது. கடந்த போட்டியில் ஜோர்டன் வீசிய ஓவரை எவரும் எளிதில் மறக்கமாட்டர். 

    ருத்ராஜ் கெய்க்வாட் ஃபார்மிற்கு வந்துள்ளது சென்னை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இரு அணிகளுக்குமே இன்றையப் போட்டியானது மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. 

    இறுதி ஓவர்களில் சென்னையின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த பும்ரா தடுப்பாக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், நேற்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த கீரன் பொல்லார்டு, சென்னை அணிக்கு எதிராக இதுவரை 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது மும்பை அணிக்கு பலமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    மேலும், இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அணி 19 முறையும், சென்னை அணி 13 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. 

    நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற இருக்கும் இப்போட்டியானது இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது அனைவருக்கும் விருவிருப்பாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படியுங்கள், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கீரன் பொல்லார்டு : ரசிகர்களை உருக்கும் வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....