Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிகமான முட்டையின் தேவை; உயர்ந்த விலை..

    அதிகமான முட்டையின் தேவை; உயர்ந்த விலை..

    முட்டை தேவையின் அதிகரிப்பால், அதன் விலை வரலாறு காணாத அளவிற்கு தற்போது அதிகரித்துள்ளது. 

    நாமக்கல் என்றதும் நினைவுக்கு வருவது முட்டையும் கோழிப்பண்ணையும் தான். நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 கோடிக்கும் அதிகமான முட்டையிடம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தக் கோழிகள் மூலமாக தினமும் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் கிடைக்கப் பெறுகின்றன. 

    அப்படி கிடைக்கும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

    இந்நிலையில், முட்டை தேவையின் அதிகரிப்பின் காரணமாக முட்டையின் விலை வரலாறு காணாத அளவிற்கு தற்போது உயர்ந்து இருக்கிறது. அதன்படி ஒரு முட்டையின் விலை 550 காசுகளாக இருந்த நிலையில், தற்போது 5 காசுகள் உயர்ந்து 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இதனிடையே சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி, ஒரு முட்டையின் விலை 600 காசுகளுக்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. 

    அர்ஜூன் ரெட்டி இயக்குநரின் அடுத்தப் படம்; ரத்தம் வடிய வடிய ஒரு போஸ்டர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....