Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஒவ்வொரு நாளும் 10 குழந்தை திருமணங்கள்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    ஒவ்வொரு நாளும் 10 குழந்தை திருமணங்கள்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

    தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 குழந்தை திருமணங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

    தமிழகத்தில் கடந்த எட்டே மாதங்களில் மட்டும் 2,516 குழந்தை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1,782 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 734 திருமணங்களை நிறுத்தமுடியவில்லை என புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 

    தமிழகத்தில் நாமக்கல், சேலம், திண்டுக்கல்,தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி, ஈரோடு, கடலூர் மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் அதிகளவில்  நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக 548 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை வெளியிட்டிருக்கும் தரவுகள் காட்டுகின்றன. 

    குழந்தை திருமணம் மற்றும் வழக்குகள் பதிவுகளில் நாமக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

    குறிப்பாக அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 95 சதவீத குழந்தை திருமணங்கள் வெற்றிகரமாக இதுவரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 

    மேலும், குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடியாமல் போக காரணங்களாக, சில திருமணங்கள் முடிந்த பிறகுதான் தங்களுக்கு தகவல்கள் கிடைக்கிறது என்றும், தகவல்கள் கிடைத்தாலும் திருமணம் நடைபெறும் இடத்தை மணமக்கள் வீட்டார் கடைசி நேரத்தில் மாற்றிவிடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க : பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்; வைரலான காட்சிகள் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....