Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்5 மாத சம்பளத்தை கொடுத்து, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அமேசான்!

    5 மாத சம்பளத்தை கொடுத்து, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் அமேசான்!

    அமேசானின் பணிநீக்க அறிவிப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணி தொடங்கியது. 

    அமேசான் நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்தது. அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. 

    இதனால், அமேசான் ஊழியர்கள் பெருமளவில் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் மேலும், 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இது குறித்து அமேசான் ஊழியர்களுக்கு அமேசான் தலைமை செயல் அதிகாரியிடம் இருந்து மெயில் வந்துள்ளது. அந்த மெயிலில் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஆதலால், மேலும், 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    அமேசானின் இந்த அறிவிப்பானது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமேசானின் பணிநீக்க அறிவிப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் 1000 -க்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

    இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அமேசான் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக இமெயில் வந்துள்ளது.

    மேலும், பணி நீக்கத்திற்கான காரணத்தை ஒருநாள் ஒதுக்கி நேரில் வந்து தெரிந்துக்கொள்ளுமாறும், பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளத்தை கொடுக்க உள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. சம்பளத்தோடு , 5 மாத மருத்துவ சலுகைகளையும் அமேசான் அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவிலிருந்து ‘இஸட்’ பிரிவுக்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....