Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்டபுள் தமாக்கா கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்...'துணிவு' தந்த சந்தோஷம்!

    டபுள் தமாக்கா கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்…’துணிவு’ தந்த சந்தோஷம்!

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளிவந்துள்ளது.

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடரந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

    இத்திரைப்படத்திற்கு முதலில் தற்காலிகமாக ஏகே-61 என்று பெயரிடப்பட்டது. இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்துவருகிறது. 

    இந்நிலையில் ‘ஏகே 61’ திரைப்படத்தின் நிரந்தர தலைப்புச் சார்ந்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வந்தன. ‘துணிவு’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகல்கள் வேகமாக பரவின. இப்படியான சூழலில் அஜித்குமார் ரசிகர்களுக்கு பேரின்பத்தை தரும் வகையில் நேற்று மாலை 6:30 மணியளவில் ‘ஏகே 61’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 

    இதையும் படிங்க: அஜித்குமார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி….உள்ளே ஃப்ரஸ்ட் லுக்!

    ஃப்ர்ஸ்ட் லுக் மூலம் ரசிகர்கள் கணிப்பு சரி என்றே தெரிந்துள்ளது. ஆம், ‘ஏகே 61’ திரைப்படத்தின் பெயர் ‘துணிவு’ என்றே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அஜித்குமார் ரசிகர்கள் வெளிவந்த ஃப்ர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

    துணிவு

    இதையடுத்து, அஜித்குமார் ரசிகர்கள் ‘ பத்தல பத்தல’ என சமூகவலைதளங்களில் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டிருக்க,  திரைப்படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டு துணிவு படக்குழு அவர்களின் சந்தோஷத்தை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது ரசிகர்கள் இந்த லுக்கையும் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....