Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு

    உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு

    அதிமுக வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், இருதரப்பு வாதங்களும் கடந்த 22 ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார். அதில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. அதே சமயம், பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. 

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி குமரேஷ் பாபுவின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். 

    ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அமர்வு நாளை விசாரணை நடத்த உள்ளனர். 

    ‘ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.’ – அமெரிக்க வெள்ளை மாளிகை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....