Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டரில் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்க எலான் மஸ்க் விருப்பமா? - வெளிவந்த தகவல்

    ட்விட்டரில் இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்க எலான் மஸ்க் விருப்பமா? – வெளிவந்த தகவல்

    ட்விட்டர் நிறுவனத்திற்கு தேவையான புதிய ஊழியர்களை இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 

    இதுமட்டுமல்லாது, இனி ட்விட்டரில் பல்வேறு மாறுபாடுகள் நிகழும் என தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில், ப்ளு டிக், ஊழியர்கள் நீக்கம் என எலான் மஸ்க்கின் அதிரடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

    ட்விட்டரில் பணிபுரிந்த 7400 ஊழியர்களில் 4700 ஊழியர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த வாரம் எலான் மஸ்க் விற்பனை (sales) சமந்தமான துறையில் பணியாற்றிய ஊழியர்களை பணநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

    மேலும், எலான் மஸ்க்கின் ‘ட்விட்டர் 2.0’ திட்டத்திற்கு இந்தியாவிலிருந்து ஊழியர்களை தேர்வு செய்ய ட்விட்டர் நிறுவனம் காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், ட்விட்டரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வேலைவாய்ப்பு சமந்தமான எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

    அதேசமயம், மென்பொருள் சார்ந்த பொறியாளர்களே தற்போது ட்விட்டர் நிறுவனத்திற்கு அதிகளவில் தேவைப்படுகிறார்கள் என்ற கூற்றும் வெளிவந்துள்ளது.

    ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை ‘, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க 5000 பணியாளர்கள் போராட்டம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....