Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநவ.26 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி; பள்ளிக்கல்வித்துறை முடிவு

    நவ.26 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி; பள்ளிக்கல்வித்துறை முடிவு

    அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் வருகிற 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. 

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் இதில் வெற்றி பெற ஏதுவாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. 

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி இணைய தளம் வாயிலாக அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று பரவல் குறைந்துள்ளதால், நேரடி முறை பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. இதன்படி, நீட் பயிற்சி நேரடி வகுப்புகள் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. 

    இந்த பயிற்சி வகுப்புகளுக்காக, மாநிலம் முழுவதும் ஒரு வட்டாரத்திற்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் ஒரு மையத்துக்கு 70 பேர் வீதம் மொத்தம் 28,980 மாணவர்களுக்கு நீட் பயிற்சி நேரடி வகுப்பு அளிக்கப்பட உள்ளது. 

    ஒவ்வொரு மையத்திலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 11 ஆம் வகுப்பில் 20 பேரும், 12 ஆம் வகுப்பில் 20 பேரும் பங்கேற்க உள்ளனர். சென்னையில் மட்டும் 10 மையங்களில் 700 பேருக்கு பயிற்சி தரப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 4 வரை நடைபெறும்.  

    இந்தப் பயிற்சி வகுப்புகளை எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளுக்கான பாடக்குறிப்புகள் அனைத்தும் தமிழக அரசால் வழங்கப்படும். மேலும் நிபுணர்கள் காணொளி வாயிலாக இணைந்து சிறப்பு பயிற்சியும் வழங்குவர். 

    இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் நீட் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை ‘, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க 5000 பணியாளர்கள் போராட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....