Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரைக்கு வந்த ஆதியோகி ரதம்; வணங்கி வழிபட்ட மக்கள்!

    மதுரைக்கு வந்த ஆதியோகி ரதம்; வணங்கி வழிபட்ட மக்கள்!

    கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்து மதுரைக்கு வந்த ஆதியோகி ரதத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். 

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ‘ஆதியோகி ரத யாத்திரை’ ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவை நகரில் இருந்து புறப்பட்டு 4 திசைகளில் பயணத்தை தொடங்கின. 

    இந்தப் பயணத்தில் நேற்று ஒரு ரதம் மதுரை வந்தது. இன்று காலை 10 மணிக்கு காளவாசல் பகுதியில் இருந்து புறப்பட்ட ரதம் பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், திருநகர் வழியாக மாலை திருமங்கலம் பகுதியை அடைந்தது. ரதம் சென்ற வழி முழுவதும் திரளான பக்தர்கள் கூடி ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். 

    இந்நிலையில், இன்று ரதம் ஜெயஹிந்த்புரம், வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வருகிறது. அடுத்தடுத்து ரத யாத்திரை மதுரையின் பிற ஊர்களுக்கும் செல்ல உள்ளது. 

    இந்த ரத யாத்திரை வருகிற 18 ஆம் தேதி மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற உள்ள ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் அழைக்கும் விதமாகவும், ஆதியோகி தரிசனத்தை அனைவருக்கும் வழங்குவதற்காகவும் நடைபெற்று வருகிறது. 

    மகளிர் ஐபிஎல் தொடர்; யார் எவ்வளவு தொகைக்குத் தேர்வானார்கள்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....