Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தி சென்ற விமானம் இறங்க அனுமதியில்லை; வாரணாசியில் குழப்பம்!

    ராகுல் காந்தி சென்ற விமானம் இறங்க அனுமதியில்லை; வாரணாசியில் குழப்பம்!

    வாரணாசியில் ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்கு பாஜகவை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்றுள்ளார். அங்கு, கால பைரவர் கோயிலுக்கு சென்றதோடு காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். 

    இந்நிலையில், இன்று காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்வதற்காக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி வாரணாசிக்கு சென்றார். ஆனால், அந்த விமானம் தரையிறங்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் கூறுகையில், ராகுல் பயணித்த விமானத்திற்கு வேண்டுமென்றே அனுமதி வழங்கப்படவில்லை என்றும் நெருக்கடி காரணமாக அதிகாரிகள் ராகுல் பயணித்த விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இதற்கு குடியரசுத் தலைவர் பயணத்தை ஒரு காரணமாக சொல்வதாகவும் கூறினார். 

    தொடர்ந்து பேசிய அவர், வாரணாசிக்கு வர திட்டமிட்ட ராகுல், அங்கிருந்து பிரயாக்ராஜ் நகர் செல்லவும் திட்டமிட்டிருந்ததாகவும், இருப்பினும் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக விமானத்திற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும், அதிகளவு விமானங்கள் இயக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் அனுமதி இல்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்ததாகவும் குறிப்பிட்டார். 

    ராகுலை பார்த்து பாஜக ஆட்சியாளர்கள் பயப்படுவதாகவும் இதன் காரணமாக வாரணாசியில் விமானம் தரையிறங்க அனுமதிக்கவில்லை எனவும் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் பயம் கொள்வதாகவும், இதன் காரணமாக அவரை தொந்தரவு செய்வதாகவும் அஜய் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

    ‘இத ஆயிரம் முறை எழுதுங்க’ – குடித்து விட்டு வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....