Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்‘காண்டம்’ , 'உண்மையான டாக்டரா','வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா': கஸ்தூரி-ஷர்மிளா கருத்து மோதலால் ஏற்பட்ட சர்ச்சை

    ‘காண்டம்’ , ‘உண்மையான டாக்டரா’,’வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா’: கஸ்தூரி-ஷர்மிளா கருத்து மோதலால் ஏற்பட்ட சர்ச்சை

    திமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சுக்கு, சர்ச்சைக்குரிய வகையில் நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். 

    திமுக நிர்வாகி சைதை சாதிக் மேடையில் பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியது. அவர் பேசியதாவது, பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள். குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி. நாங்கள் (திமுக) கட்சி வளர்த்தபோது, சீதாபதி, பலராமன், டி.ஆர்.பாலு என தற்போது இளைய அருணா (திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்) வரை கட்சி வளர்க்கிறார்கள். ஆனால், பாஜகவில் தலைவர்களைப் பார்த்தால் எனக் கூறி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.

    இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகியின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளிவந்தன. இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான முறையில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

     இதையடுத்து, திமுகவைச் சேர்ந்த டாக்டர் ஷர்மிளா, கஸ்தூரியை டேக் செய்து ஒரு பதிவை பதிவு செய்தார். அதில், அந்த பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்கப்பட வேண்டியது மேடம்.இருப்பினும், நீங்கள் தொடங்கி வைத்த ‘#திராவிடிய_பசங்க’ என்ற ஹேஷ்டேகை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த டேகை சங்கி குழு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தொடங்கப்பட்ட #திராவிடிய_பசங்க என்ற ஹேஷ்டேக்கில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நீங்களும் அதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று மறைமுகமாக சாடியுள்ளார்.

     ஷர்மிளாவின் இந்த பதிவுக்கு கஸ்தூரி பதில் பதிவு செய்தார். அப்பதிவில், ”மன்னித்தல் என்பது ஏற்றுக்கொள்வதும் ஊக்குவிப்பதும் ஆகும். கண்டனம் என்றால் எதிர்ப்பு என்று பொருள். கடவுளுக்கு நன்றி, இவர் ‘காண்டம்’ என்று எழுதவில்லை. அவர் (ஷர்மிளா) உண்மையான டாக்டரா அல்லது வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா? எதுவாக இருந்தாலும், திராவிடம் என்பது வெட்கக்கேடான கருத்து என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த பதிவு மோதலானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    முன்னதாக, சைதை சாதிக் பேச்சுக்கு குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்து அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு அவர் டேக் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, குஷ்புவின் கண்டனத்திற்கு கனிமொழி பதில் அளித்து மன்னிப்பும் கோரினார். கனிமொழியின் மன்னிப்பு பதிவுக்கு குஷ்பூ நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    மறைந்த கன்னட நடிகர் புனித்திற்கு அரசின் உயரிய விருது: ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....