Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'உருவபொம்மை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்'- திமுக தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை

    ‘உருவபொம்மை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்’- திமுக தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை

    உருவபொம்மை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    கடலூரில் அண்ணாமலையின் உருவபொம்மையை தெருவில் திமுக தொண்டர்கள் இழுத்து சென்றனர். இதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அண்ணாமலையின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவப்படம், உருவ பொம்மையை திமுகவினர் காலணிகளால் அடித்து தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். 

    இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், 

    போலி இந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் முதல்-அமைச்சர் நவ.4-ம் தேதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். 

    மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக தெறிந்துவிட்டது. கோவை கார் குண்டு வெடிப்பு குறித்து வாய் திறக்க முதல்-அமைச்சர் யோசிக்கிறார். முஸ்லீம்கள் ஓட்டு வராது என்றெண்ணி ஓட்டுக்காக இச்சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்.

    எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவரை பேச சொல்லுங்கள்; அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும்

    இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ‘காண்டம்’ , ‘உண்மையான டாக்டரா’,’வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா’: கஸ்தூரி-ஷர்மிளா கருத்து மோதலால் ஏற்பட்ட சர்ச்சை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....