Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தில் கே.ஜி.எஃப் நடிகரா? - வெளிவந்த தகவல்..

    நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தில் கே.ஜி.எஃப் நடிகரா? – வெளிவந்த தகவல்..

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல்கள்  வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், விஜய் தனது அடுத்த திரைப்படத்திற்காக தயராகி உள்ளார். விஜய்யின் 67-ஆவது படத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணையவுள்ளனர்.

    இதுவரை, விஜய்யின் 67- ஆவது திரைப்படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இருப்பினும், ரசிகர்கள் அப்படத்தை ‘தளபதி 67’ என்றே அழைத்து வருகின்றனர். ‘தளபதி 67’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இத்திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவூட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கேஜிஎஃப் திரைப்படத்தில் அதிரா கதாப்பாத்திரத்தில் மிரட்டிய சஞ்சய் தத் ‘தளபதி 67’ திரைப்படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதனிடையே,  ‘தளபதி 67’ -இல் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது மட்டும் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ‘மெரினாவில் ஜல்லிக்கட்டு’ – அனுமதி கோரியுள்ள கமல்ஹாசன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....