Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமாரின் படத்தில் இணையவுள்ள இரு முக்கிய நட்சத்திரங்கள்..

    அஜித்குமாரின் படத்தில் இணையவுள்ள இரு முக்கிய நட்சத்திரங்கள்..

    அஜித்குமாரின் 62-ஆவது திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமியும், சந்தானமும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம்தான், துணிவு. இத்திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 

    துணிவு பொங்கலுக்கு வெளியாகவுள்ளதை தொடர்ந்து, அஜித்குமார் நடிக்க உள்ள அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. முன்னதாகவே, நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே-62’ என்றும் பெயரிடப்பட்டது. 

    தற்போது வெளிவந்துள்ள அப்டேட்டின்படி, ஏகே-62 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சாமியும், முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிகர் சந்தானமும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஏகே-62 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, இத்திரைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டிக்கெட் இல்லை; எட்டி உதைத்த பரிசோதகர்கள் – வைரலான காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....