Friday, March 24, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய் ரசிகர்களே அடுத்த இன்ப அதிர்ச்சிக்கு தயாரா? தகவல் உள்ளே!

    விஜய் ரசிகர்களே அடுத்த இன்ப அதிர்ச்சிக்கு தயாரா? தகவல் உள்ளே!

    தமிழ் சினிமாவின் தற்போதைய பெரும் பேசுபொருளாக இருப்பது பீஸ்ட் திரைப்படம் குறித்தவைகள்தான். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படமானது ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது. விஜய் திரைப்படம் என்றாலே இசை வெளியீடு முக்கியமானது என்றாகிவிட்டது. ஆனால் இம்முறை இசை வெளியீட்டு விழா இல்லை என்கின்ற தகவல்களே இதுவரை வெளிவந்துள்ளன.

    இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் குறித்த எந்த அறிவிப்புகளும் வரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் ஏமாற்றத்தை போக்கி, அவர்களை குதூகலப்படுத்துவதற்காகவே நேற்று பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து பாடல் ப்ரோமோ ஒன்று எவரும் எதிர்பாரா வண்ணம் வெளியிடப்பட்டது.

    jollyo gymkhana

    விஜய் அவர்களின் குரலில் வருகிற 19 ஆம் தேதி வெளியாக உள்ள ஜாலியோ ஜிம்கானா பாடல் குறித்து தற்போதே ஆவல் அதிகரித்துள்ளது. ஜாலியோ ஜிம்கானா பாடல் ப்ரோமோவும் பலரை கவர்ந்துள்ளது. இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.

    ஆம்! பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் வெளியீடு என்று தெரிவித்த நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை இதுவரையில் அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கவில்லை. ஆகவே, பீஸ்ட் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் உடன் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும் மோஷன் போஸ்டர் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உள்ளது.

    இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது ஆனந்த களிப்பில் சமூக வலைத்தளங்களில் பீஸ்ட் குறித்த பதிவுகளையும், விஜய் குறித்த பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். 

    விஜய் அவர்களின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி திரைப்படத்தில் வெளிவந்த மோஷன் போஸ்டர்தான்தான் தமிழ் திரையுலகில் மோஷன் போஸ்டர் கலாச்சாரத்தை அதிகம் தெரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிவர இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர், கத்தி திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை மிஞ்சும் அளவுக்கு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

    இதையும் படிங்க ; இம்முறை குட்டி ஸ்டோரி இல்லையா? பெரும் ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    dhanbad glider plane accident

    வீட்டின் மீது மோதிய விமானம்; ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு

    ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் நேற்று வியாழக்கிழமை ஒரு வீட்டின் சுவர் மீது  சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.  ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் நேற்று ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம்...