Friday, March 31, 2023
மேலும்
    Homeசமூக வலைதளம்கிரிக்கெட் வீரர் அஷ்வினை சிரிப்பில் ஆழ்த்திய டான் சிவகார்த்திகேயன்!

    கிரிக்கெட் வீரர் அஷ்வினை சிரிப்பில் ஆழ்த்திய டான் சிவகார்த்திகேயன்!

    சிவகார்த்திகேயனின் டான் 

    சிவகார்த்திகேயன் நடிப்பில் மே மாதம் வெளியாக இருக்ககூடிய திரைப்படம்தான், டான்! மிகவும் கலகலப்பாக, கொண்டாட்ட மனநிலையோடு உருவாகியிருக்கும் இத்திரைப்படம் மக்களை ஆனந்தமாக சிரிப்புகளுடன் ரசிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவே படக்குழு தெரிவித்திருக்கிறது.

    sivakarthikeyan-don

    டான் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த முதல் பாடலான ‘ஜலபுல ஜங்கு’ம் சரி, இரண்டாம் பாடலான ‘பே’வும் சரி கலகலப்பான பாடலாகத்தான் இருந்து வருகிறது. குட்டிஸ் மற்றும் இளைஞர்கள் இடையே இவ்விரு பாடலுக்கும் கிடைத்திருக்கும் வரவேற்பு எழுத்தில் அடங்காதவை.

    டான் மே மாதம் வருகிறான் 

    டான் திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மே மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் டான் திரைப்படம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    sivakarthikeyan-don

    இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவர்களுடன் இணைய வழி நேர்காணலில் சிவகார்த்திகேயன் அவர்கள் இணைந்தார். அந்த நேர்காணலில், டான் திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜெ. சூர்யா அவர்களைப்போல் சிவகார்த்திகேயன் அவர்கள் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் பேசியதை எஸ்.ஜெ. சூர்யா அவர்களும் ரசித்து அக்காணொளியை ரீ-ட்வீட் செய்துள்ளார்.

     

    டான் நடிகர்கள்

    டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். டான் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அவர்கள் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, விஜய் டிவி சிவாங்கி, சூரி, பாலா சரவணன் போன்றோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க; சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த நன்றி; ஆனால் ஏமாற்றத்தில் இரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    news

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய...

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள்...