Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த நன்றி; ஆனால் ஏமாற்றத்தில் இரசிகர்கள்!

    சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த நன்றி; ஆனால் ஏமாற்றத்தில் இரசிகர்கள்!

    சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் இறுதியாய் வெளிவந்த டாக்டர் திரைப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. இப்படத்தின் வெற்றி டாக்டர் திரைப்படத்தை சார்ந்த அனைவரின் அடுத்த திரைப்படங்களின் மீதும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. டாக்டர் திரைப்படத்தை சார்ந்தவர்களுக்க இப்படி என்றால், டாக்டர் திரைப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் மீது தமிழ் திரையுலக இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.Sivakarthikeyan இந்த இரட்டிப்பு எதிர்ப்பார்ப்பு சிவகார்த்திகேயன் அவர்களின் டான் திரைப்படத்தின் மீது விழுந்துள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க, அனிரூத் அவர்கள் இசையமைக்க, டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா மோகன் இப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே. சூர்யா அவர்கள் டான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    sivakarthikeyan-don

    டான் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் சுட்டீஸிடமும், இளைஞர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்களிடம் டான் திரைப்படத்தைப் பற்றிய தொடர் பேச்சுகள் இருக்க, சிவகார்த்திகேயன் அவர்கள், டான் திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தார். rrr

    இவ்வறிவிப்பால் குதூகலத்துடன் இருந்த சிவகார்த்திகேயன் இரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர். ஆம்! மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவிருந்த டான் திரைப்படம் தற்போது மே மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

    don movie postponed

    மார்ச் 28 ஆம் தேதி ராஜமெளலி இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்ப்பாரப்பை மக்களிடத்தில் உருவாக்கியிருக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாக இருப்பதால், டான் திரைப்பட வெளியீட்டுத் தேதி தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டான் திரைப்பட வெளியீட்டை தள்ளி வைத்தமைக்காக ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழு, டான் திரைப்படக்குழுவுக்கும், சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

    don

    மேலும், ஏப்ரல் மாதத்தை எடுத்துக்கொண்டாலும் பீஸ்ட், கேஜிஎஃப் இரண்டாம் பாகம் போன்ற திரைப்படங்கள் வெளியாவதாலும் விக்ரம் திரைப்படமும் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்ததை அடுத்து டான் திரைப்படத்தை மே மாதம், கோடை விடுமுறை விருந்தாக வெளியிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....