Thursday, March 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'தயவுசெய்து இதை செய்யாதீங்க' - ரசிகர்களுக்கு சிம்பு வைத்த வேண்டுகோள்..

    ‘தயவுசெய்து இதை செய்யாதீங்க’ – ரசிகர்களுக்கு சிம்பு வைத்த வேண்டுகோள்..

    வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50-ஆவது நாள் விழாவில் பங்குபெற்ற நடிகர் சிம்பு ரசிகர்களிடம் வேண்டுகொள் வைத்தார். 

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வெளியானது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. திரைப்படத்தின் பாடல்களும், வசனங்களும் என வெந்து தணிந்தது காடு குறித்து நேர்மறை விமர்சனங்கள் குவிந்தன. 

    ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முன்னதாக வெளிவந்த திரைப்படங்கள் பெரியதாக வெற்றிப்பெறாத நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றி அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் உத்வேகத்தை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் 50 நாள்களை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50-வது நாள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர். 

    நடிகர் சிம்பு பேச வரும்போதே ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேலும், ‘நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக மக்கள் கொண்டாடுவார்கள். வெந்து தணிந்தது காடு வெளியாவதற்கு முன் பயமாக இருந்தது. கமர்சியலாகவும் இல்லாமல் நாயக பிம்பத்தை பெரிதாக காட்டாமல் வித்தியாசமாக உருவான இப்படத்தை நீங்கள் வெற்றிப்படமாக மாற்றியது எங்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியம் அளித்தது. இந்தப்படத்தில் முத்துவாகவே தெரிய வேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கெட்டு நடித்தேன்’ என்று தெரிவித்து தனது உரையை முடித்தார். 

    இதன் பின்பு, மீண்டும் திடீரென மேடைக்கு வந்த சிம்பு, “ஒரு படத்தை திரையிட தயாரிப்பாளரும் இயக்குநரும் ரொம்ப சிரமப்படுகிறார்கள். நீங்கள் தினமும் அப்டேட் கேட்டால் தவறான முடிவுகளை எடுக்கும்படி அமைந்துவிடுகிறது. ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து எந்தப் படத்தின் அப்டேட்களையும் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள்’ எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்கடாக்டர் பட்டம் பெறுகிறார் இளையராஜா…நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....