Friday, March 22, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சிம்புவின் பத்து தல; வெளிவந்த அப்டேட்!

    சிம்புவின் பத்து தல; வெளிவந்த அப்டேட்!

    நடிகர் சிலம்பரசன்  நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம்தான், ‘பத்துதல’. கன்னட மொழியில் வெளிவந்து பெரியளவில் ஹிட் அடித்த ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்தான், இந்த பத்து தல. 

    நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கிய கிருஷ்ணகுமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக், டீஜே, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படமானது வருகிற மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி பத்து தல திரைப்படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகவுள்ளது. 

    ‘நம்ம சத்தம்’ என்று ஆரம்பிக்கும் இப்பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

    patthu thala

    முன்னதாக, நடிகர் சிலம்பரசன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்த திரைப்படங்களின் மியூசிக் ஆல்பங்கள் பெரிய அளவில் பேசப்பட்டதால், இப்படத்தின் மியூசிக் ஆல்பம் மீது ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    80 ஆண்டுகளாக நீடித்த துயரம்; கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்த பட்டியலின மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....