Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசொத்துக்களை பறிக்க அண்ணனை மனநல காப்பகத்தில் சேர்த்த தங்கை; திருப்பூரில் அதிர்ச்சி!

    சொத்துக்களை பறிக்க அண்ணனை மனநல காப்பகத்தில் சேர்த்த தங்கை; திருப்பூரில் அதிர்ச்சி!

    திருப்பூரில் சொத்துக்களை பறிப்பதற்காக அண்ணனை அடித்து துன்புறுத்தி மனநல காப்பகத்தில் சொந்த தங்கையே சேர்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் அவிநாசியை அடுத்த தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி இவரது மகன் சிவக்குமார் (வயது 52). இவரின் தங்கை அம்பிகா, கணவர் வேலுச்சாமி, மகன் கோகுல் ஆகிய இம்மூவரும் பல்லடம் சேடப்பாளையத்தில் வசித்து வருகின்றனர்.

    இதில் அம்பிகாவின் கணவரான வேலுச்சாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அண்ணன் தங்கையான இவர்களின் தகப்பனார் பொன்னுசாமி ஒரு சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், இவரின் அடிப்படையில் இருந்த பூர்விக சொத்துக்கள் அனைத்தும் சிவக்குமார் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரியவருகிறது. மேலும், சிவக்குமார் விவாகரத்து செய்து தனியாக வசித்து வந்திருக்கிறார். இதனை காரணமாக கொண்டு பூர்விக சொத்துக்களை தனக்கு தருமாறு அம்பிகா கேட்டு வந்திருக்கிறார்.

    இதற்கு சிவக்குமார் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த அம்பிகா மற்றும் அவரின் குடும்பத்தினர்கள் சேர்ந்து கடந்த ஜனவரி 25-ஆம் தேதி சிவக்குமாரை கடத்தி பல்லடத்தில் உள்ள அம்பிகாவுக்கு சொந்தமான வீட்டில் அடைத்து வைத்து கூலிப்படை வைத்து அடித்து துன்புறுத்தி வந்திருக்கின்றனர்.

    வலிதாங்க முடியாமல் சிவகுமார் கதற, அந்நேரத்தை பயன்படுத்தி அவரிடம் சொத்து பத்திரங்களான 21 பத்திரங்களிலும் கையேழுத்து பெற்று கொண்டதோடு, அவரின் பெயரில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை அபகரித்து பெங்களூருவில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அவரை சேர்த்திருக்கின்றனர்.

    காப்பகத்தில் இருந்த சிவக்குமார், தனக்கு நடந்தவற்றை அங்கு இருந்தவர்களிடம் கூறி அங்குள்ளவர்களின் உதவியோடு தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையறிந்து பெங்களூரு சென்ற உறவினர்கள், அவரை அங்கு இருந்து மீட்டு பல்லடத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

    இதுதொடர்பாக ,சிவக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், இச்சம்பவத்தில கூலிப்படையாக செயல்பட்ட ரியாஸ்கான் (29), அஸ்ரப்அலி (30), சாகுல்அமீது (35) உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய புள்ளியான அம்பிகா தலைமறைவான நிலையில் அம்பிகாவை காவல் துறையினர், வலை வீசி தேடி வருகின்றனர்.

    தாய்க்கு பேய் ஓட்ட வந்த மந்திரவாதியால் பலாத்காரத்துக்கு உள்ளான மகள்; நாகர்கோவிலில் அதிர்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....