Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு80 ஆண்டுகளாக நீடித்த துயரம்; கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்த பட்டியலின மக்கள்!

    80 ஆண்டுகளாக நீடித்த துயரம்; கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்த பட்டியலின மக்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாகக் கோயிலுக்குள் நுழையாமல் இருந்த பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைந்து சிறப்புப் பூஜைகளைச் செய்தனர். 

    திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கிராமங்ளில் ஒன்றுதான், தென் முடியனூர். இந்தக் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

    தென் முடியனூர் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்குள் பட்டியலின மக்களை நுழைய விடாமல் ஒரு சமூகத்தினர் தடுத்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாகக் கோயிலுக்குள் நுழையாமல் இருந்து வந்தனர். 

    பட்டியலின மக்களும் கோயிலுக்குள் தங்களை அனுமதிக்க கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்தது. மேலும்,  பட்டியலின மக்கள் எங்களையும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் முறையிட்டனர். 

    இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கிராமத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் ஒரு சமூகத்தினர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இருப்பினும் பட்டியலின மக்கள் கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ், எஸ்.பி. கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைந்து சிறப்புப் பூஜைகளைச் செய்தனர். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் பதிவில், “80 ஆண்டுகளாகக் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை, தீண்டாமை ஒழிப்பு தினத்தில் கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்தோம். பட்டியலின மக்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்டியுள்ளோம். காவல்துறை அதிகாரியாக என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள்” என தெரிவித்துள்ளார்.

    ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி; சிகிச்சைப் பலனின்றி காதலன் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....