Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அசர்பைசான் நாட்டின் பாராளுமன்றத்தில் ஷூட்டிங் - சர்தார்' படத்தின் புதிய அப்டேட்!

    அசர்பைசான் நாட்டின் பாராளுமன்றத்தில் ஷூட்டிங் – சர்தார்’ படத்தின் புதிய அப்டேட்!

    நடிகர் கார்த்தி 2005ஆம் ஆண்டு வெளிவந்த பருத்தி வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் இந்தப் படம் பல விருதுகளை குவித்தது. அடுத்தடுத்து செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி என படங்களில் ரசிகர்களின் மனதை வென்ற சிறந்த ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வருகிறார்.

    கார்த்தி தற்போது விருமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இதை அடுத்து சர்தார், பொன்னியின் செல்வன், கார்த்தி 24, கார்த்தி 25 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் கார்த்தி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ‘சர்தார்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

    ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போது ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்து வருகிறார். கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் மற்றும் நடிகை லைலா இருவரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்கிறார். சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

    சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் இந்திய படம் சர்தார் தான். அதையடுத்து ஜார்ஜியாவிலும் படமாக்கப்பட்டது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்தாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சர்தார் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இன்று முதல் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே 18 நாட்கள் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் நடத்தப்பட இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சர்தார் படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல்  போஸ்டரில் கார்த்தி வயதான தோற்றத்தில் இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டு, அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    ஹோட்டல் ஸ்டைலில் காய்கறி வெள்ளை குருமா; இப்படி செய்யலாம், நல்ல மணமா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....