Monday, March 18, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புஹோட்டல் ஸ்டைலில் காய்கறி வெள்ளை குருமா; இப்படி செய்யலாம், நல்ல மணமா!

    ஹோட்டல் ஸ்டைலில் காய்கறி வெள்ளை குருமா; இப்படி செய்யலாம், நல்ல மணமா!

    காய்கறி வெள்ளை குருமா உணவகத்தில் உள்ள சுவையிலேயே வீட்டிலும் செய்யலாம் வாருங்கள். 

    தேவையானப் பொருட்கள்: 

    1. கேரட்- 1 எண் 
    2. பீன்ஸ்- 10 எண் 
    3. பட்டாணி- 50 கிராம் 
    4. காலிஃப்ளவர் – 50 கிராம் 
    5. தேங்காய்- 50 கிராம் 
    6. பட்டை- 2 எண் 
    7. லவங்கம்- 2 எண் 
    8. பிரியாணி இலை- 1 எண்
    9. முந்திரி- 5 எண் 
    10. ஏலக்காய்- 2 எண்
    11. பச்சைமிளகாய்- 3
    12. வெங்காயம்- 2  
    13. தக்காளி- 2
    14. சோம்பு- 1 தேக்கரண்டி 
    15. சீரகம்- 1 தேக்கரண்டி 
    16. பூண்டு- 4 பல்
    17. இஞ்சி- 1 துண்டு 
    18. கருவேப்பில்லை- ஒரு இணுக்கு 
    19. கொத்தமல்லித்தழை- ஒரு கொத்து 
    20. உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு

    செய்முறை: 

    • தேங்காய், சோம்பு, சீரகம், பட்டை ஒன்று, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு போன்றவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • காய்களை நன்றாக சுத்தம் செய்து உங்களுக்கு பிடித்த வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • குக்கர் ஒன்றில், எண்ணெய் ஊற்றி அதில் ஒரு பட்டை, லவங்கம், பிரியாணி இலை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதில், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கருவேப்பில்லை மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்து நறுக்கிய காய்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். 
    • அடுத்து, அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை, இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். 
    • மிதமான தீயில் வைத்து, குறைந்தது இரண்டு அல்லது அதிகபட்சமாக மூன்று விசில்கள் வரை விட வேண்டும். 
    • விசில் அடங்கியதும் திறந்து அதில், கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சூடான சுவையான காய்கறி வெள்ளை குருமா தயார். 
    • காய்கறி வெள்ளை குருமா,சப்பாத்தி, பூரி, பரோட்டா, தோசை, இட்லி உள்ளிட்ட உணவு வகைகளுக்கு மிகச் சிறந்த இணை. 

    சத்து: காய்கறிகளில் பொதுவாக, நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. 

    ஆன்ட்ராய்டு டூ ஐபோன்: வாட்சப் தரவுகளை மாற்றுவது எப்படி??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....