Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷின் 'வாத்தி' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    தனுஷின் ‘வாத்தி’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    நடிகர் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் தனுஷ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில்,  சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடரந்து, கடந்த 4-ஆம் தேதி வாத்தி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ் மற்றும் பாரதிராஜா பேசியது வைரல் ஆனது. 

    இந்நிலையில், வாத்தி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். 

    வாத்தி

    மேலும், வாத்தி திரைப்படம் வெளியாகவுள்ள 17-ஆம் தேதியே, தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ‘தற்போது வெளியானதுதான் காந்தாராவின் இரண்டாம் பாகம்’ – காந்தாரா இயக்குநர் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....