Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்உலகை சுற்றிப் பார்க்க அஜித் போட்ட புதிய திட்டம் : என்னவாக இருக்கும் ?

    உலகை சுற்றிப் பார்க்க அஜித் போட்ட புதிய திட்டம் : என்னவாக இருக்கும் ?

    நடிகர் அஜித்குமார் 18 மாதங்களுக்கு தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடரந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: இசைப்புயலோடு மாஸ்டர் பிளாஸ்டர் எடுத்த வைரல் புகைப்படங்கள்

    இதற்கு அடுத்தபடியாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித்குமார் 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மோட்டார் சைக்கிள் மீது கொள்ளைப்பிரியம் கொண்டவர் அஜித்குமார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே.  

    மேலும், விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தை முடித்தப் பின்னே அஜித்குமாரின் இந்தப் பயணம் தொடங்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒரு பக்கம் ரசிகர்களுக்கு இச்செய்தி குஷியைத் தந்தாலும், 2 வருடங்களுக்கு அஜித்குமார் நடிக்கமாட்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. 

    இதையும் படிங்க‘படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்’ – பாகாசூரன் பாட்டு குறித்து இயக்குநர் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....