Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு; எடியூரப்பா வழக்கில் சிக்கிய ஈ.பி.எஸ் உறவினர்

    ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு; எடியூரப்பா வழக்கில் சிக்கிய ஈ.பி.எஸ் உறவினர்

    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான 12 கோடி ரூபாய் ஊழல் வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    பெங்களூர் வளர்ச்சி ஆணையம் எனப்படும் பிடிஏ (Bangalore Development Authority), குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை எடுத்தது. இதற்கு அனுமதி அளித்தவர் முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. 

    எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் இந்தக் கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்தத்தை பெற்ற ராமலிங்கத்திடம், 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் குற்றம் சாட்டி இருந்தார். 

    இது தொடர்பாக வெளியான எடியூரப்பாவின் பேரனுடன் ஒப்பந்ததரர் சந்திரகாந்த் ராமலிங்கம் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதையும் படிங்க: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

    இதைத்தொடர்ந்து, இந்த ஆடியோ சம்பந்தமாக வழக்கும் தொடரப்பட்டது. அதே சமயம் மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் நீதிமன்றம் இதற்கான அனுமதியை மறுத்தது. 

    மேலும், இது தொடர்பான வழக்கில் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக லோக் ஆயுக்தா அமைப்புக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் எடியூரப்பா, அவரின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது கர்நாடக லோக் ஆயுக்தா அமைப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவராக சந்திரகாந்த் ராமலிங்கம் சேர்க்கப்பட்டுள்ளார். 

    சந்திரகாந்த் ராமலிங்கம் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி முறை உறவுக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....