Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபும்ராவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து ரவி சாஸ்திரி பேச்சு..

    பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து ரவி சாஸ்திரி பேச்சு..

    சர்வதேச இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் பும்ரா விளையாட முடியாதது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மனம் திறந்துள்ளார். 

    2022-ம் ஆண்டுக்கான சர்வதேச இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கவுள்ள இருபது ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது.

    இதையும் படிங்க:அமெரிக்காவில் இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்; பிஞ்சு குழந்தையை கூட சுட்டு கொன்ற கொடூரர்கள்

    ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பும்ரா காயம் காரணமாக இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வந்தது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. 

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இது பற்றி கூறுகையில், ‘இந்திய அணிக்கு இப்போது அதிகளவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக காயங்கள் ஏற்படுகிறது. பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அதேசமயம், இது மற்ற வீரர்களுக்கு அணியில் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு. நம்மிடம் தரமான மற்றும் பலமான அணி உள்ளது என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.’  

    மேலும், ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....