Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'சர்தார்' திரைப்படத்தில் வந்தியத்தேவனின் குரல்; ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

    ‘சர்தார்’ திரைப்படத்தில் வந்தியத்தேவனின் குரல்; ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

    சர்தார் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ‘ஏறு மயிலேறி’ என்ற பாடலை பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் அதிக நபர்களால் விரும்பப்பட்ட மிகப் பெரிய கதாபாத்திரம் தான் வந்தியத் தேவன். பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்ட போது நடிகர் திலகம் எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, கமல் என பலரும் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம் வந்தியத்தேவனுடையது தான்..

    பலரின் எதிர்பார்ப்பில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு மட்டுமல்ல, படிக்காமல் படம் பார்த்தவர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இந்தக் கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது என பலரும் கருத்து வருகின்றனர். 

    இதையும் படிங்க:தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் முன்பதிவு 50 ஆயிரத்தை எட்டியது

    இதனிடையே,  பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள, கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், ரஜிஷா விஜயம் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் சர்தார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

    இந்நிலையில், இந்த சர்தார் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ‘ஏறு மயிலேறி’ பாடலை பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். யுக பாராதி இந்தப்பாடலை எழுதியுள்ளார். இந்தப் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....