Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆடிப்பெருக்கு விழா, காவிரி ஆற்றில் குளிக்க கட்டுப்பாடு

    ஆடிப்பெருக்கு விழா, காவிரி ஆற்றில் குளிக்க கட்டுப்பாடு

    ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்க கட்டுப்பாடுகள் விதித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். 

    மேற்கு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

    இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு விழாவின்போது ஆறுகளில் நீராடும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மக்கள் நீராட வேண்டும். மேட்டூர் அணை கரையோரம், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். இதனை, மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். 

    மேலும், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்கதர்கள் குளிக்கத் தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாற்றாக, பக்கதர்கள் நீராட தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....