Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாதல் யார் மீதும் வரும்: ஆணாக மாறி தன்னிடம் படித்த மாணவியையே திருமணம் செய்த ஆசிரியை!

    காதல் யார் மீதும் வரும்: ஆணாக மாறி தன்னிடம் படித்த மாணவியையே திருமணம் செய்த ஆசிரியை!

    ராஜஸ்தானில் ஆசிரியை ஒருவர் காதல் மாணவிக்காக தனது பாலினத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் சேர்ந்தவர் திருநங்கை ஆசிரியை மீரா குண்டல். நாக்லா துலா கிராமத்தின் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியையான இவர், இப்போது தன்னை ஆரவ் குண்டல் என்று பெயர் மாற்றம் செய்துகொண்டுள்ளார்.

    ஆரவ் குண்டல் (மீரா) தனது உடற்கல்வி வகுப்பு ஒன்றில் கல்பனாவை முதன்முதலாகப் பார்த்துள்ளார். பிறகு, விளையாட்டு மைதானங்களில் விளையாட வரும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. 

    இந்நிலையில், தனது காதல் மாணவிக்காக இவர் ஞாயிற்றுக்கிழமை பாலினத்தை உறுதிப்படுத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக கல்பனா கூறுகையில், மாநில அளவிலான கபடி வீராங்கனையான கல்பனா, அவர்களது உணர்வுகள் பரஸ்பரம் இருப்பதாகவும், தனது ஆசிரியையின் பாலினம் தனக்கு முக்கியமில்லை. ஆரம்பத்தில் இருந்தே நான் அவரை நேசித்தேன். அவர் பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

    கல்பனா ஆரவ்வுடன் அவரது அறுவை சிகிச்சைக்கு சென்றபோது அதற்காக அவர், பல முறை பதிவு செய்ய வேண்டியிருந்ததாக கூறியுள்ளார்.

    பாலின மாற்ற அறுவை சிகிச்சை, பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை (GRS) அல்லது பாலின உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சை (GCS) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய பாலினமாற்ற நடைமுறைகள் சமீபகாலமாக நாட்டில் அங்கீகரிக்கப்பட்டதாக மாறி வருகிறது .

    இதையும் படிங்க: கஞ்சா அடிச்சா தப்பில்ல… ஆனா தப்பு ! பாஜக பிரமுகர்களின் ‘உல்டா புல்டா’ கருத்துக்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....