Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ? வரும் 16ம் தேதி முதல் அடுத்த ஆட்டம்...

    மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ? வரும் 16ம் தேதி முதல் அடுத்த ஆட்டம் ஆரம்பம் !

    நவம்பர் 16-ஆம் தேதி புதிய ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தே காரணம். மேலும்,
    வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வங்கக் கடலில் வருகிற 16 ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மழையின் அளவு குறைந்தே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, நேற்று தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் எச்சரிக்கையானது திரும்ப பெறப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? லவ்டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....