Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'ரெட் அலெர்ட் வாபஸ்' ? ஆனாலும் தமிழகத்தில் மிக கனமழை தொடரும் ! வானிலை ஆய்வு...

    ‘ரெட் அலெர்ட் வாபஸ்’ ? ஆனாலும் தமிழகத்தில் மிக கனமழை தொடரும் ! வானிலை ஆய்வு மையம்

    ரெட்-அலர்ட் திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகவும் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களை கவனமாக இருக்கும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.மேலும், வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்து எச்சரிக்கையிட்டது.

    இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கை பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது வட தமிழக கடலோரப் பகுதி மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருகிறது.

    இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அதிக கனமழையும் , நாளை முதல் நவம்பர் 16 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....