Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்வெள்ளபாதிப்பில் இருந்து பயிர்களை காக்க விவசாயிகளுக்கு அமைச்சர் கொடுத்த அறிவுரை...

    வெள்ளபாதிப்பில் இருந்து பயிர்களை காக்க விவசாயிகளுக்கு அமைச்சர் கொடுத்த அறிவுரை…

    மழை காலங்களில், விளை நிலங்களில் உள்ள சிறுசிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில்
    உள்ள, செடி கொடிகளை அகற்றிட வேண்டும் என அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    வட கிழக்கு பருவமழை 2022 – 11.11.2022 முதல் 14.11.2022 வரை கனமழை முதல் அதிகனமழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
    வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தின் இயல்பான வருடாந்திர மழையளவு 937.50 மிமீ. இதில் 448 மிமீ (48%) மழையளவு இயல்பாக வடகிழக்கு பருவமழையில் கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழையின் போது வெப்பமண்டல சூறாவளி மற்றும் அதனுடன் தொடர்புடைய புயல்கள் காரணமாக மாநிலம் அதிகபட்ச பேரிடர்களை சந்திக்கிறது.

    2022-ஆம் ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை 29.10.2022- ஆம் தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது, இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் 11.11.2022 முதல் 14.11.2022 வரை கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

    விவசாயிகள் பொதுவாக பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:

    1. விளை நிலங்களில் உள்ள சிறுசிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில்
    உள்ள, செடி கொடிகளை அகற்றிட வேண்டும்.
    2. வடகிழக்கு பருவமழையின் போது வெள்ள மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில்
    உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிட வேண்டும்.
    3. வெள்ள மழைக் காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல்,
    களைக்கொள்ளி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.

    இதையும் படிங்கசென்னையில் இன்றைய மழை நிலவரம்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தெளிவான தகவல்

    வெள்ள சூழ்நிலையில் நெற்பயிருக்கான மேலாண்மை நடவடிக்கைகள்:

    1. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரினைவடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல்.

    2. நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய மழை நின்று, நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இடவும்.

    3. போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளித்தல்.

    4. தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீ ரில் முதல் நாள் ஊரவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான கொண்டு தெளிக்கவும். இவ்வாறு செய்து மகசூல் இழப்பில் இருந்து பயிரை காப்பாற்றுதல்.

    5. மழைக்காலத்தில் புகையான் பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் செல்லும் பொழுது வேம்பு சார்ந்த பூச்சி மருந்தாகிய அசாடிராக்டின் 0.03 சதவீத மருந்தினை ஒரு எக்டருக்கு 1000-மிலி என்ற அளவில் வேளாண் துறையின் பரிந்துரையின் படி உபயோகப்படுத்துதல்.

    மேலும் நவம்பர் 15ம் தேதி சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்திட கடைசி நாள் என்பதால் நிர்ணயித்த தேதிக்குள் பதிவு செய்திட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள 5,908 வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் மழை வெள்ள நிலையை கண்காணித்து தகுந்த அறிவுரை வழங்கி விவசாய பெருமக்களுக்கு உறுதுணையாக களத்தில் பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இதையும் படிங்க: மீண்டும் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ? வரும் 16ம் தேதி முதல் அடுத்த ஆட்டம் ஆரம்பம் !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....