Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅதிகரித்து வரும் அம்மை நோய்: இருவர் உயிரிழப்பு..! 126 குழந்தைகள் பாதிப்பு

    அதிகரித்து வரும் அம்மை நோய்: இருவர் உயிரிழப்பு..! 126 குழந்தைகள் பாதிப்பு

    மராட்டிய மாநிலத்தில் அம்மை நோய் தாக்கி ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மராட்டிய மாநிலம், மும்பையில், நல் பஸார் பகுதியில் ஒரு வயதே ஆன குழந்தை உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. 

    அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரல் பாதிப்பும், சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை உயிரிழந்தது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக சிகிச்சை அளித்த மருத்துவர் மங்களா கோமரே, குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும், காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும், கொப்பளங்கள் இல்லை எனவும், குழந்தை 10 கிலோ எடை மட்டுமே இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்ததாகவும், இணை நோய்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். 

    நிம்மோனியாவுடன் கூடிய செப்டிசீமியா எந்தந்த பாக்டீரியாவால் ரத்தத்தில் விஷம் கலந்து குழந்தை உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது, மராட்டியத்தில் 2-வது உயிரிழப்பு பதிவாகி உள்ளது. குழந்தைகளிடையே இந்த அம்மை பாதிப்பு நோய் அதிகரித்து வரும் நிலையில், 617 பேர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பாதிப்பு 126 குழந்தைகளுக்கு இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

    இதையும் படிங்கஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என மருத்துவ துறை திட்டமிட வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....