Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஏழைக்கு ஒரு சட்டம், ராகுல் காந்திக்கு ஒரு சட்டம் இல்லை- பாஜக அண்ணாமலை

    ஏழைக்கு ஒரு சட்டம், ராகுல் காந்திக்கு ஒரு சட்டம் இல்லை- பாஜக அண்ணாமலை

    ஏழைக்கு ஒரு சட்டம், ராகுல் காந்திக்கு ஒரு சட்டம் இல்லை என்ற வகையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்கு எதிராக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதோடு ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 

    சட்டம் அனைவருக்கும் பொருந்தும்; ஏழை எளியவர்களுக்கு ஒரு சட்டம் எஜமானருக்கு ஒரு சட்டம் என்ற நிலை இல்லை எனவும், சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில் அவர் மேல் முறையிட்டிருக்கு செல்லலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே தவிர, நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என கூறவில்லை. ஆகையால், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். 

    மேலும் அவர், ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பளித்த வகையில் தண்டனை பெற்ற எம்பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதேபோல ராகுல் காந்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார். 

    சாதாரண மனிதனுக்கு ஒரு நீதி, அரச குடும்பத்திற்கு ஒரு நீதி என்று இல்லாமல் அனைவருக்கும் ஒரே நீதி என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை பேசினார். 

    ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடக் கூடாது என இது போன்று நடவடிக்கை
    எடுக்கவில்லை.  அவர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், அவர் பேச பேச தான் பாஜகவுக்கு வளர்ச்சி என்றும் ராகுல் காந்தி தான் பாஜகவின் பிராண்ட் அம்பாசிட்டர் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். 

    தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....