Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு! வாகனங்களை நிறுத்த புதியமுறை

    மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ வருகின்ற ஏப்ரல்‌ 19, 2023 முதல்‌, அனைத்து மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள வாகன நிறுத்துமிடங்களில்‌ பயணிகள்‌ தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம்‌ செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ இரயில்‌ பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையானது மிகவும்‌ திறமையான, வசதியான மற்றும்‌ பாதுகாப்பான கட்டண முறைக்காகவும்‌, அத்துடன்‌ பணப்‌ புழக்கத்தைக்‌ குறைக்க வேண்டிய தேவைக்காகவும்‌ எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பயணிகள்‌ வாகன நிறுத்துமிடங்களில்‌ இருந்து வேகமாக நுழைவது மற்றும்‌ வெளியேறுவது, பரிவர்த்தனைகளில்‌ வெளிப்படைத்தன்மை மற்றும்‌ பணமில்லா

    பரிவர்த்தனைகளின்‌ வசதி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கும்‌. பயணிகள்‌ மெட்ரோ இரயில்‌ பயண அட்டையை அனைத்து மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள டிக்கெட்‌ கவுண்டர்களிலும்‌, மெட்ரோ இரயில்‌ நிலைய வாகன நிறுத்துமிடத்திலும்‌ பெற்றுக்கொள்ளாலம்‌.

    மெட்ரோ இரயில்‌ பயணிகள்‌ பயண அட்டையை மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ உள்ள டிக்கெட்‌ விற்பனை செய்யும்‌ இடத்தில்‌ மற்றும்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ இணையதளத்திலும்‌  செய்துகொள்ளலாம்‌. வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகல்‌ பயண அட்டைகளுடன்‌ மட்டுமே கிடைக்கும்‌.

    பிரபல பாடகிக்கு மூளையில் ரத்தக் கசிவா? – வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....