Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஆழ்கடலில் விளம்பர பேனர் வைத்த ரசிகர்கள்! நடிகர் சந்தானத்தின் படம் வெற்றி பெற வாழ்த்து..

    ஆழ்கடலில் விளம்பர பேனர் வைத்த ரசிகர்கள்! நடிகர் சந்தானத்தின் படம் வெற்றி பெற வாழ்த்து..

    புதுச்சேரியில் நடிகர் சந்தானம் நடித்து வெளியாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தையொட்டி படம் வெற்றி பெற கோரி புதுச்சேரி ஆழ்கடலில் விளம்பர பேனர் வைத்து ரசிகர்கள் வரவேற்பளித்தனர்.

    புதுச்சேரியில் அரசியல் தலைவர்கள், நடிகர்களின் பிறந்தநாள் மற்றும் புதிய திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் கடலுக்கு அடியில் விளம்பரங்கள் வைக்கும் புதிய கலாச்சாரம் புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது.

    அந்த வகையில் ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமிக்கும், நடிகர்கள் அஜித், விஜய், விக்ரம், யாஷ் ஆகியோருக்கு கடலுக்கடியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பேனர்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் ரசிகர்கள் வைத்தனர்.

    அடுத்ததாக தற்போது நடிகர் சந்தானம் ரசிகர் மன்றத்தினர் இன்று வெளியாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தைவித்தியாசமாக வரவேற்கும் வகையில் ரசிகர் மன்ற பேனரை ஆழ்கடலில் பிடித்து மகிழ்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ‘கன்னட தேசிய கவி குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது’: தமிழ் மொழிக்காக எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....