Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரத்த வாந்தி எடுத்த இளைஞரின் வயிற்றை ஆய்வு செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    ரத்த வாந்தி எடுத்த இளைஞரின் வயிற்றை ஆய்வு செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    ராஜஸ்தானில் ரத்த வாந்தி என சென்ற இளைஞரின் வயிற்றில் இருந்த பிளேடுகளை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    ராஜஸ்தான் மாநிலம், சன்சோர் மாவட்டத்தில் உள்ள டட்டா கிராமத்தில் வசித்து வருபவர் யாஷ்பல் சிங். இவருக்கு வயது 25. இவர் தனது 4 நண்பர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 

    இந்நிலையில் இவர் வீட்டில் இருந்தபோது, திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை தனது நண்பரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக, யாஷ்பால் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    முதலில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவருக்கு, யாஷ்பலின் வயிற்றில் ஏதோ உலோகம் இருப்பது தெரிய வந்ததால் சோனோகிராஃபி, எண்டோஸ்கோபி என பரிசோதனைகளை மேற்கொண்டதில் யாஷ்பலின் வயிற்றில் நிறைய பிளேடு துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்த பிளேடுகள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டது. 

    இதுகுறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் நார்சி ராம், யாஷ்பல் தற்போது நலமாக இருப்பதாகவும், பிளேடுகளை அதன் பேப்பர் கவரோடு அவர் சாப்பிட்டதாகவும், முதலில் சாப்பிடும்போது பேப்பரோடு பிளேடுகள் இருந்ததால் அப்போது வலி தெரியாமல் இருந்ததாகவும் கூறினார். 

    மேலும், பிளேடுகளை அவர் உட்கொண்ட பிறகு, அந்தப் பேப்பர்கள் கரைந்ததால் வயிற்றில் அசவுகரியம் ஏற்பட்டு குமட்டலாக வெளிப்பட்டு, ரத்த வாந்தி எடுத்தாகவும் அத்தனை பிளேடுகளையும் இரண்டாக உடைத்தே பேப்பரோடு யாஷ்பால் சாப்பிட்டு இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

    இன்னும் ஒருசில நாட்களில் இடமாறும் மெரினா காந்தி சிலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....