Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா7 மாத குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம்; பொதுமக்கள் போராட்டம்

    7 மாத குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம்; பொதுமக்கள் போராட்டம்

    நொய்டா பகுதியில் 7 மாத குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    உத்தரபிரதேசம் இடையே தில்லி அமைந்துள்ள நகரம் நொய்டா. இந்நகரில் செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிடவேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

    அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்களின் 7 மாத கைக்குழந்தையுடன் வேலைக்கு சென்றனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்து வந்தனர். 

    அப்போது, திடீரென அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெருநாய், தனியாக இருந்த அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்தது. தெருநாய் கடித்து குதறியதில் பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 

    குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட உடனே, கட்டிட தொழிலாளிகளான பெற்றோர், சென்று பார்த்தனர். அப்போது, குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    பிறகு, தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    இதையும் படிங்க: யார் நரி? யார் யானை? – ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையில் இடம்பெற்றுள்ள திருக்குறள்!

    படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், தெருநாய்கடியால் பலத்த காயமடைந்த குழந்தை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையயடுத்து உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் நடத்தினர். 

    இருப்பினும், அதை ஏற்காத பொதுமக்கள், அங்கு சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதில் நகராட்சி நிர்வாகம் தவறிவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டினர்.

    மேலும் அவர்கள் தெருநாய்களிடம் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டம் என்று  கோரிக்கை வைத்தனர். 

    இதையும் படிங்க: 7 மாத பச்சிளம் குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....