Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு: மேலும் பதற்றத்தில் உக்ரைன்!

    ரஷ்யா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு: மேலும் பதற்றத்தில் உக்ரைன்!

    மரியுபோல் நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர முயற்சி செய்து வந்த நிலையில் இதனை, எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைத்த ரஷ்யா உக்ரைன் மீது போரைத் தொடுத்தது. இதனால், உலக நாடுகளில் பெரும் அரசியல் குழப்பங்கள் நிலவி வந்தது. உக்ரைன் நாட்டு மக்கள் பலரும் அண்டை நாடுகளுக்கு குடியேறினர். சில உக்ரைன் நாட்டு பொதுமக்கள், பதுங்கு குழிகளில் தங்கி உயிர்பிழைத்து வந்தனர். பல ஆயிரக்கணக்கானோர் போரில் பரிதாபமாக உயிரிழந்தனர். தரைப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைனின் முக்கிய நகரங்களை தாக்கியது ரஷ்யா. 

    உக்ரைன், சிறிய நாடு என்றாலும் முடிந்த அளவு தனது பலத்தை கொண்டு முயற்சி செய்து வருகிறது. இதனிடையே, உக்ரைனின் கீவ், கார்கிவ் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல் போன்ற முக்கிய நகரங்களை எப்படியாவது கைப்பற்றிட வேண்டும் என்ற நோக்கில் முழு முயற்சியுடன் களத்தில் இறங்கியது ரஷ்யா. சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யா மரியுபோல் நகரை கைப்பற்றியதாக அறிவித்தது. மேலும் உக்ரைன் இராணுவ வீரர்களை சரணடையும் படி கெடு அளித்தது, உக்ரைன் இராணுவ வீரர்கள் மறுத்ததால் மேலும் தாக்குதலை தீவிரப்படுத்தியது, ரஷ்யா. உக்ரைன் இராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். மேலும், ரஷ்யா கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வந்தது. 

    இந்த நிலையில், ரஷ்யா அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் ரஷ்யா துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் ரஷ்ய அதிபர் புதின், மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு தனது பாராட்டுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள், மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் கைப்பேசிக்கு தடை – பிறந்த புதிய உத்தரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....